சான்றிதழ் வழங்கும் வைபவம்

 

சூரிய நிறுவகத்தினால் நடாத்தப்படும் இலவச சிங்கள மொழி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

கொரோனா அச்சம் காரணமாக 4 பிரிவுகளில் கல்விகற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் மேற்குறித்த நான்கு பிரிவு மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

சூரிய நிறுவகத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய, சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்ரஹாம் சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சான்றிதழ் வழங்கும் வைபவம்

சான்றிதழ் வழங்கும் வைபவம்