டெங்கு நுளம்புகள் அதிகரிப்பதாக எச்சரிக்கை

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டெங்கு நுளம்புகளின் அடர்த்தி வேகமாக அதிகரிக்க கூடும் என பூச்சியியல் நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வருடம் மழைவீழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் தாக்கத்தினால் இவ்வாறான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தை விட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 19,912 ஆகவும், இவ்வருடம் 59,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தற்போது பெய்து வரும் மழையுடன் கூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திசானக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.