அப்துல்கலாம் மணற்சிற்பம்
-யாழ் நிருபர்-
வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் இந்தியாவின் முன்னாள், மறைந்த ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
மறைந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 91வது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காரைநகர் கசூரினா கடற்கரையில் வேலணை சுகுமாரின் கைவண்ணத்தில் அப்துல்கலாம் அவர்களின் பிரமாண்ட மண்சிற்பம் வடிக்கப்பட்டது. இதில் யாழ். இந்திய உதவித்துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அமரர் அப்துல்கலாம் அவர்களுக்கு தமது இதய அஞ்சலியை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இந்தியதூதர அலுவலக காரியாலய அலுவலகர்களும் கலந்துகொண்டு தமது அஞ்சலி செலுத்தினர்.
வேலணை சுகுமார் பல ஆலயங்களில் மணலில் சிற்பம் வரையும் திறமையானவர் என்பது யாவரும் அறிந்தது. நல்லூர் முதல் பெருந்தலங்களில் திருவிழா காலங்களில் தனது கைவண்ணத்தினால் பல சிற்பங்களை மண்ணில் வரைந்து பலரது பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
