தொங்கிய நிலையில் சடலம் மீட்பு : 10 பேர் கைது
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் பிரிவில் உட்பட்ட யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக தொங்கியவர் குறித்த கட்டிடத்தின் நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 32 வயதுடைய நபர் என்ன அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அக் கட்டடத்தில் நிர்மாண பணியில் ஈடுபட்டுவந்த 10 பேரை யாழ். பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.