இளவயது திருமணம் : மணமகன் கைது

மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் இளவயது திருமணத்தை தடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலையிட்டுள்ளது.

மொரட்டுவையில் உள்ள திருமண வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது மணமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அதன் அவசர தொலைபேசி எண் 1929 மூலம் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையுடன் இணைந்து இவ்விடயத்தில் தலையிட்டது.

மணமகளுக்கு 15 வயது என்றும் மணமகனுக்கு 19 வயது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மணமகன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, மணமகள் மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.