காலி முகத்திடல் கடற்கரையில் சிறுவன் உயிரிழப்பு

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காலி முகத்திடலை அண்மித்த கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கியதாகக் கருதப்படும் காணாமல் போன சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.