கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

லொறி ஒன்றில் கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி – ரெண்டபொல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு பயன்படுத்த முடியாத 8,807 கிலோ கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதான மெனிக்போவ – ஹொடியாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அட்கல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.