இதல்கஸ்ஹின்ன பகுதிக்கு தற்காலிக தடை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன படகு மலைப் பகுதி ஆபத்தான பகுதி என்பதால் இரவு வேளைகளில் அங்கு செல்வதும், முகாமிடுவதும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகள்இ உயிரிழக்கும் விபத்துக்கள், தீ வைப்பு, மக்காத கழிவுகளை விட்டுச் செல்வது மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது போன்ற காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய தெரிவித்தார்.