
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுகின்றது
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்துள்ளோம்.
எனினும், மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ளபோதும், அதற்கு செலுத்துவதற்கு அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கப்பலுக்கான அன்னிய செலாவணியை மத்திய வங்கி ஒதுக்கியதும், குறித்த கப்பலின் எண்ணெய் இறக்கப்பட்டு, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்படும்
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், எரிபொருள் விநியோகத்தை நிலையான முறையில் மேற்கொள்ள முடியும்.
எனவே எரிபொருள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
