வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

-மன்னார் நிருபர்-

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன்.சி.விஜய் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் மன்னார் கல்வி வவலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவரை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யாவரும் பாராட்டி மகிழ்கின்றனர்.

இவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுவிப்பாளர் திரு.M.F.ரொசேன் செரூபா பீரிஸ், அதற்கு உற்சாகப்படுத்தி வழி நடாத்திய பாடசாலையின் அதிபர் T.ஆனந்தன் (SLPS-2), மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக்கல்விப்பணிப்பாளர் பாராட்டி மகிழ்கின்றது.

நீண்ட காலத்தின் பின்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட போட்டிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP