இன நல்லுறவை வலுவூட்டும் வேலைத்திட்டம்

-திருகோணமலை நிருபர்-

பள்ளிவாசல் சுற்றுப்பயணம் மூலம் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவுப் பாலங்களை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான சர்வமத நிகழ்வு திருகோணமலையில் இடம் பெற்றது.

திருகோணமலை அனுராதாபுர சந்தி அல்ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் இன்று 9.30 மணி முதல் 2.30 மணி வரை இடம் பெற்றது.

இதன் போது பள்ளிவாசல் தரிசிப்பது பற்றியும் வணக்க வழிபாடுகளை நேரடியாக காண்பித்தல்.

இஸ்லாம் பற்றிய தப்பான அபிப்ராயங்களை தெளிவுபடுத்தல், எங்களின் கட்டிடக்கலை வரலாறு ஆன்மீக விழிமியங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளல் இஸ்லாமிய வாழ்க்கை வரலாறு பற்றிய சுவரொட்டிகள் காட்சி படுத்தப்பட்டதுடன், தொழுகை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் நேரடியாக காண்பிக்கப்பட்டது.

இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் இமானுவேல், பௌத்த மதத்தைச் சேர்ந்த மதகுருமார்கள் பாடசாலை மாணவர்கள் எனவும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP