வீடியோவால் வந்த வினை
திருகோணமலை-கிளிவெட்டி -ஆசாத் நகர் பகுதியில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கைகலப்பின் போது பிடிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் குறித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது கணவர் மனைவியை தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கிளிவெட்டி- ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மத் அஸ்லம் (32வயது) என்பவர் மூதூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை மூதூர் நீதிமன்ற நீதவான் தஸ்லீம் பானு முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் இஸ்லாம் மதத்தை தழுவிய நிலையில் கிளிவெட்டி -ஆசாத் நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாமையினால் கோபம் கொண்ட நிலையில் மனைவியை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இருந்த போதிலும் பெண்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கணவராக இருந்தாலும் பெண் ஒருவரை இவ்வாறான விதத்தில் தாக்குவது பெண் சமத்துவத்தை இல்லாதொழிக்கும் செயல் எனவும் குறித்த செயற்பாட்டை வண்மையாக கண்டிப்பதாக திருகோணமலை பெண்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
