சதுரங்க போட்டியில் தேசிய ரீதியில் 2ம் இடத்தைப் பிடித்த மாணவி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சதுரங்க சம்மேளனத்தின் National Youth Rapid championship 2022 Under 14 girls பிரிவில் மட்டக்களப்பு சிங்கிங் பிஷ் சதுரங்க கழகத்தில் தற்போது சதுரங்கம் பயிலும் மாணவி எஸ்.நர்த்தவி தேசிய ரீதியில் 2ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

7 சுற்றுக்களை கொண்ட இந்த சுற்றுப் போட்டியில் 6 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுள்ளார். எஸ்.நர்த்தவி யாழ்/ வேம்படி பெண்கள் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்துக்கள் எஸ்.நர்த்தவி

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP