105 வயதுப் பாட்டி கௌரவிப்பு

-யாழ் நிருபர்-

சர்வதேச சிறுவர், முதியோர் தினமானது ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது.

இந்த சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்கள், தொல்புரம் கிழக்கு பகுதியில் வசிக்கும் 105 வயதுடைய செல்லத்துரை சரஸ்வதி என்ற மூதாட்டிக்கு உதவிப் பொருட்களை வழங்கி கௌரவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 07 வயோதிபர்கள் 100 வயதிற்கு மேல் வாழ்கின்றனர். அந்த 07 பேரினுள் வலி. மேற்கு பகுதியில் வசிக்கும் மேற்குறித்த மூதாட்டியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP