எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலையில் இன்று ஒக்டோபர் முதலாம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ளன தீர்மானத்திற்கு அமைய இது மேற்கொள்ளப்படவுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதற்கான கொள்கை முடிவை அரசாங்கம் மேற்கொண்டது, அதன்படி, பெற்றோல் மற்றும் டீசல் விலையில் இறுதியாக ஜூலை 17 அன்று திருத்தம் செய்யப்பட்டது.

அதன் பின் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP