திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டனர்.
திருக்கோணேஸ்வரா ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதையில் இரு பக்கங்களிலும் கடைத் தொகுதிகள் அமைக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காக மாவை சேனாதிராஜா எம். ஏ. சுமந்திரன். திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டனர்.
கோணேஸ்வரா ஆலயத்தின் புனித தன்மையை சீரழிக்கும் நோக்கில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் விசேடமாக ரத்னபுரி மாவட்டத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்து இங்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் ,இது நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினையாகும் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் அண்மையிலே இவர்களுக்கு இப்பிரதேசத்துக்குள்ளே வேறு இடத்தில் காணிகளை வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தோம்.
இலங்கை தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது கடந்த வாரம் திருக்கோணேஸ்வரம் ஆலய பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்திருந்தோம்.
இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட குழுவுடன் பேசுவதற்கு முன்னர் விஜயம் மேற்கொண்டதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளை தலைவர் சன்முகம் குகதாஸன் முன்னால் நகர சபை தலைவர் கே.செல்வராஜா (சுப்ரா) மற்றும் வெள்ளத்தம்பி சுரேஸ் என பலரும் கலந்து கொண்டனர்.
-திருகோணமலை நிருபர்-
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்