60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
60 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 60 லீட்டர் லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி – முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது, காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்த 35 வயது மற்றும் 50 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 60 லீட்டர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக செய்திகளுக்கு:- Minna24news
இவற்றையும் பார்வையிடலாம் :- வங்கிக்கொள்ளை : பிரதேசசபை உறுப்பினர் கைது