அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அரச செலவினங்களைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தமது வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பயணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேவையான அத்தியாவசிய அதிகாரிகளை மட்டுமே கொண்ட குழுவுடன் பயணிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.