யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களினால் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்-

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களினால் இரத்ததான முகாம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முக அமைப்பு பீடபிடாதிபதி நிமலதாசனின் வழிகாட்டலில் முகாமைத்துவ பீடத்தின் 23 வது அணியினரால் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அதிகமாக மாணவர்கள் தன்னார்வ ரீதியாக கலந்து கொண்டு இரத்த தானத்தில் ஈடுபட்டனர்.

இவ் இரத்ததான முகாமில், யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட பீடாதிபதி நிமலதாசன், யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய செயலாளர் சி.றாகவன் உட்பட யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களின் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.