கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தமர்வு


-மன்னார் நிருபர்-

சர்வதேச கரையோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச  சபை கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விழிப்புணர்வு கருத்தமர்வு இடம் பெற்றது.

காலநிலை மாற்றம், கரையோர பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், அவற்றில் கண்டல் தாவரங்களின் பங்கு, கரையோர வளங்கள் அழிக்கப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வு கருத்தமர்வு இடம் பெற்றது.

இக்கருத்தமர்வில் வன விரிவாக்க துறை உத்தியோகத்தர் . பிரஷாந்த், கரையோர பாதுகாப்பு துறை உத்தியோகத்தர் து.கேசவன், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ மற்றும் பணியாளர்கள், மீனவர்கள், மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்கள், பூனகரி பிரதேச சமாச நிர்வாகிகள், கரையோர பிரதேச மக்கள் மற்றும் இளையோர்கள் என 50 க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.