மன்னாரில் இரத்ததான முகாம்

மன்னார் நிருபர்-

மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அடிகளார் தலைமையில் மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இரத்ததான முகாம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் குறித்த இரத்த தான முகாம் இடம் பெற்றது.

இதன் போது பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் வைத்தியர், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.