மறைமுக வரியை குறைத்து நேரடி வரியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு

மறைமுக வரி வீதத்தை குறைத்து நேரடி வரி வீதத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு, என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு என்ற வகையில் நாம் புதிய ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும், என பதில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கலால் திணைக்களத்தின் தரவுகளின்படி இறால் ஏற்றுமதி மூலம் வருடாந்தம் 4.2 பில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதாகவும், அதனை சுமார் 10 பில்லியனாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.