அரிசி இறக்குமதியை நிறுத்த கோரிக்கை

நாட்டில் போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதால் அரிசி இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்முறை பருவத்தில் எதிர்பார்த்த விளைச்சலை விட அதிகளவிலான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதால், இவ்வருடம் 6 இலட்சம் மெற்றிக்தொன் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட வேண்டுமென, விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.