கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு

சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக, வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் சில வகை மீன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக, வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உள்ளது.