மரத்தடியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

நிட்டம்புவ பிரதேசத்தில் மரத்தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஒருவரே நேற்று வியாழக்கிழமை மாலை எல்லக்கல பிரதேசத்தில் மரத்தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மேலும் இருவருடன் மது அருந்திய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், இருவர் மரக் கம்பத்தால் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.