எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர் வரும் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசெபத்தின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளதால், பொது விடுமுறை மற்றும் தேசிய துக்க நாளாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.