வாளுடன் நால்வர் கைது
-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் நான்கு இளைஞர்கள் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில், 20,20,21,23 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
