
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் மேலும் இருவர் கைது
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு 7 பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவராவார்.
இதேவேளை, அலவ்வ – சவந்தன பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் வீட்டிற்கு கடந்த மே மாதம் 9ஆம் திகதி தீ வைத்து சேதம் விளைவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உதகன்கந்த – அலவ்வ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
