
தந்தையின் வாகனத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த 2 வயது மகள்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை செலுத்திய வேனில் மோதி இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ரஜீந்தன் நட்சத்திரா (02 வயது) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தந்தை வேனை பின்னால் எடுத்த போது சிறுமி தடக்கி விழுந்து, வேனுக்குள் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
