சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு

புதிதாக 38 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வு, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.

அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஏனையோர் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறுகிறது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.