எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிட நடவடிக்கை

ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் வகையில், பாடசாலைக்கு வரும்போது மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலை வாயிலில் சோதனைக்கு உட்படுத்தப்படும், என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான சுற்று நிருபம் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும், என அமைச்சர் தெரிவித்தார்.