
கழிவு நீர் கால்வாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
குருநாகல் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான பாடசாலை சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை பை ஒன்று இருப்பதனை கண்ட மக்கள் மேற்கொண்ட தேடுதலில் கால்வாயில் பாடசாலை சிறுவன் சிக்குண்டு இருப்பதனை அவதானித்தனர்.
அதனையடுத்து, குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைககளில் குறித்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளார்.
