மட்டக்களப்பு தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இச்சுற்றுப் போட்டி குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலிடத்தைப் பதிவு செய்தது.

இச்சுற்றுப் போட்டியில் மாகாணப் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 08 அணிகள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.