தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், உயர்தரப் பரீட்சை டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

டிசெம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி முதல் வாரம் வரை நடைபெறும், என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.