ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்லும் யோசனை பயனற்றது
ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையால் பொருளாதார மையங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என பொருளாதார நிலையங்களின் மொத்த வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ரயிலில் பல தடவைகள் காய்கறிகளை ஏற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, மரக்கறி ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகளை கொண்டு செல்வதற்கு ஒரே வழி, என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
