
மட்டக்களப்பில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
பாம்பு தீண்டியதால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிரான் – திகிலிவெட்டை கிராமத்தை சேர்ந்த யோகநாதன் சாந்தன் (24 வயது) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மிய்யான்கல் வயல் பிரதேசத்தில் வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறித்த இளைஞனை பாம்பு தீண்டியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
