ஐயாயிரத்திற்கு மேல் மின் கட்டணம் நிலுவை : மின்துண்டிப்பு எச்சரிக்கை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் ஐயாயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துண்டிக்கப்படும் என வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் ஐயாயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் மூவாயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.