
பெற்றோலிய கூட்டுத்தாபனம் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் – எரிசக்தி அமைச்சர்
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த பதினைந்து நாட்களில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சொத்துக்கள் தொடர்பில் அதன் நிர்வாகத்திடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற குழு கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
