நாளை நாடு திரும்புகிறார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை வெள்ளிக்கிழமை இலங்கை திரும்புவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய அவர் மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்து சென்று அங்கு சில தங்கியிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார், என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.