வாக்களிக்காத உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என நாமல் கோரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவாக வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ஷ, தற்போதைய நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்வதில் ஜனாதிபதி கவனம் செலுத்தக் கூடாது, என்று தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை பல அரசியல் கட்சிகள் நிராகரித்துள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமக்கு வாக்களித்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட வலுவான அரசாங்கத்தை ஜனாதிபதி நியமித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும், என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
