
கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து இன்று வியாழக்கிழமை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் விவசாய செய்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது உரப்பையினால் கட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் இனங்காணப்பட்டதையடுத்து, கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த வெடிபொருட்களை மீட்டனர்.
மேலும், மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
