ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக ஊழியர் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு

கேகாலை – களுகல மாவத்தையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், களுகல்ல மாவத்தையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் ஊழியரான கேகாலை – ஹம்புதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.