இன்று முதல் அமுலாகிறது VAT வரி அதிகரிப்பு

12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட்ட பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பினை, கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கும் போது முன்மொழிந்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழமையானது.

எனினும், பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.