IMF உடன் இறுதி ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இன்று வியாழக்கிழமை இறுதி ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

இலங்கைக்கு அவசர கடனுதவி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

நேற்று பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக தெரிவித்தார்.

நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலருடன் நிதிநிதியின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.