
நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் : 64 பேருக்கு தொற்று உறுதி
நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட 2 ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக இது தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நாட்டில் மேலும் 64 பேருக்கு இன்று புதன்கிழமை கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,957 ஆக அதிகரித்துள்ளது
