
மரக்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது
மரக்கறிக் கடைகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்து வரும் நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
காய்கறி விளைச்சல் அதிகமாகி வருவதால், காய்கறிகளின் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மரக்கறி விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பீன்ஸ், லீக்ஸ், கரட், உள்ளிட்ட பல மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக. வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மரக்கறிகளின் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
