முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும்

எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால், அதற்கான கட்டுப்பாட்டு விலையை அறிவிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் முட்டை மற்றும் கோழியின் விலை அதிகரித்து வருகின்றது.

கோழிகளுக்கான தீவனத்தை பெற முடியாமையே இதற்கான காரணம் என கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சந்தையில் முட்டை மற்றும் கோழியின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.