
சுகாதார நிபுணர்கள் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்ட மூன்று வகையான மருந்துகள் அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அந்த மருந்துகள் ஏற்கனவே மருத்துவ வழங்கல் பிரிவினால் விநியோகிக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இருந்த போதிலும், சுகாதார அமைச்சரை வரவழைத்து சம்பிரதாயபூர்வமாக மருந்துகளை அறிமுகப்படுத்தியமை ஏமாற்று வேலை என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் மூன்று வகையான மருந்துகளை சந்தைக்கு வெளியிடுவதற்கான விழா, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில், இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது.
அங்கு, தைராக்ஸின் குறைபாட்டிற்கான மருந்து (லெவோதைராக்ஸின் 50 எம்.சி.ஜி), இரைப்பை அமிலத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க கொடுக்கப்படும் மருந்து (ஓமெப்ரஸோல் 20 மி.கி) மற்றும் வலி நிவாரணி மருந்து (மெஃபெனாமிக் அமிலம் 50 மி.கி) ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
