ரதிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிட்டவர் கண்டு பிடிக்கப்பட்டார்

காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளரான ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் குறித்த நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் நேற்று புதன்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபர் அங்கு வருகை தந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஜா -எல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையொன்றிலுள்ள ரதிந்து சேனாரத்ன பிரத்தியேக சேமிப்பு கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பணம் வைப்பு செய்யப்பட்ட அதே நாளில் ரதிந்து சேனாரத்னவும் சம்பவம் குறித்து தனியார் வங்கியில் முறைப்பாடு செய்திருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.