
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஸலாமா பௌன்டேஷனின் இரத்ததான முகாம்
மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 6 வது தடவையாக மேற்கொள்ளப்படும் இரத்ததான முகாம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும் ஆ பள்ளிவாயலில், பள்ளிவாயலின் தலைவர் எம்.எச்.எம்.சியாம் தலைமையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமிற்கு , பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார்.





மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் தியாகராஜா தவனேசன் தலைமையிலான இரத்த வங்கியின் உத்தியோகத்தர் குழுவினர் இரத்தக் கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ .வீ.கே.சிவபாலன் குருக்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் அருட்தந்தையுமான நவரெட்ணம் நவாஜி அடிகளார் பிஸ்மி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி கலந்து சிறிப்பித்ததுடன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் எம்.பி.மதன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எம்.மதிவண்ணன், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மாவட்ட ஊடக அதிகாரி வீ.ஜீவானந்தன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் செயலாளர் தியாகராஜா, பள்ளிவாயலின் செயலாளர் அமீன் நழீமி உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்திருந்ததனர்.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயலுடன் இயங்கிவருகின்ற ஸலாமா பௌன்டேஷனானது, கடந்த 2016 ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பில் சமூக சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக செயற்பட்டுவரும் ஒரு அமைப்பாக திகழ்ந்துவருவதுடன், இம்முறை 6 வது தடவையாக இந்த இரத்த தானப்பணியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



